Sunday, March 19, 2006

நாலு பேருக்கு நல்லதுன்னா.....

'நம்மளை யாரும் கூப்பிட்டுற கூடாதே'ன்னு நாலு வாரமா வலைப்பூ வீதிகளில் (அதிகம்) தென்படாமல் இருந்தாலும் (Nothing but inertia); புதிதாக பார்த்துவிட்ட நண்பர் முபாரக் 'நாலு ' சொல்லு சொல்லிட்டுப் போங்கன்னு கூப்பிட்டுவிட்டார்.

நமக்கு சொல்றதுக்கு அதிகமில்லேன்னாலும் 'நாலு' பேர இழுத்து விடணும்னா தப்பில்லே... எதுவும் தப்பில்லே':-))ங்கறதால சரின்னு வந்துட்டேன்.

நான் இருந்த நாலு இடங்கள்:
1). நெய்வேலி
தகப்பனார் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்தபோது நிறுவனத்தார் அளித்த வீட்டில் குடியிருந்தோம்.என் பால பருவங்கள் அவை.பக்கத்து வீட்டினராய்; நண்பர்களாய் அமைந்த 'ஜெயின் மாமா, குப்தா மாமா,கல்ஜி மாமா போன்றோர் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். நான் பள்ளிக்கூட வாயிலை மிதிக்கத் தொடங்கிய பொழுது வேலையிலிருந்து தகப்பனார் தானே விலகிக்கொள்ள, சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் வந்து விழுந்தோம். பெருங்காய மணம் போல மனதில் கமழ்ந்துக்கொண்டிருக்கின்றன நெய்வேலி ஞாபகங்கள். இப்போதும் விடுமுறைகளில் வருகை தருகிறேன்.

2).காரைக்கால்
கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு மின் சாதன விற்பனையகத்தில் ஏற்றுக்கொண்ட வேலையின் பொருட்டு ஐந்து வருடங்கள் காரைக்காலில் இருந்தேன்.
சமீபத்தில் என் பழைய நாட்குறிப்புகளை புரட்டிய பொழுது கண்ணுற்ற - காரைக்காலைப் பற்றி நான் குறித்திருந்த வரிகள் - 'வெறியுணர்வுக்கு உணவில்லை வெட்டிப்பேச்சுக்கு இடமில்லை சூழலின் சப்தங்களும் சலனங்களும் செவியில் உறுத்தாத நன் நகரம் - இங்கு குறிப்பிடத்தக்கன.

3). தமாம்/அல்கோபர் (சவூதி அரேபியா)

உள்ளூரில் இருக்கும் உணர்வைத் தந்த நகரம் இது.

4). ரியாத் (சவூதி அரேபியா)

பணத்தின் காரம் மணம் குணம் நிறைந்த பெருநகர்.

அடுத்து, பார்க்க விரும்புகிற இடங்கள், பிடித்த தலைவர்கள், ரசித்த திரைப்படங்கள், விரும்பியுண்ணும் உணவு வகைகள் என்பனவற்றை நிறைய எழுதலாம். எனினும் ஜல்லியாகவோ, தொல்லையாகவோ(என்னளவிலேனும்) அவை மாறிவிடும் அபாயத்தை முன்னிட்டு இந்த ஆட்டத்துக்கு என்னை அழைத்த முபாரக் அவர்களுக்கு நன்றியையும் என் அழைப்பின் பேரில் தொடரவிருக்கிற கீழ்க்காணும் நால்வருக்கு வேண்டுகோளையும் வைத்து விடை பெறுகிறேன்.

அழைக்க விரும்பும் நால்வர்:
1).தன் சிந்தனைகள் கருத்துக்களால் விருந்து படைக்கும் 'கான்டிவிட்டி' அவர்கள்
2).வலைப்பூவுலகின் புதிய தாரகை 'லக்கி' ஷாஜஹான்
3).இளங்கோவடிகளின் இலக்கிய இளவல் இளங்கோ அண்ணன்.
4).வலைப்பூவுலகின் அரசியல் அறிஞர் குழலி அவர்கள்.
நன்றி!

4 comments:

முபாரக் said...

அழைப்பை ஏற்று மதிப்பளித்து (மானம் காத்த) நாலின் வாலை நச்சென்று பிடித்து தொடர்ந்த உங்களுக்கு நன்றி

\\ரியாத் - பணத்தின் காரம் மணம் குணம் நிறைந்த பெருநகர்//

சரியாகச் சொன்னீர்கள். :)

குழலி / Kuzhali said...

//வலைப்பூவுலகின் அரசியல் அறிஞர் குழலி அவர்கள்.
//
ஆகா என்னங்க இது உங்க குசும்புக்கு அளவேயில்லையா? அழைப்புக்கு நன்றி

contivity said...

அன்பரே இப்னு ஹம்துன்,

பரவாயில்லையே என் பதிவையும் மதிச்சுக் கூப்பிட்டிருக்கீங்க.. அழைப்புக்கு நன்றி. பின் விளைவுகளையும் சந்திக்கத் தயாராகுங்க

Anonymous said...

அன்பின் நண்பர் பஃருத்தீன்,

அழைப்புக்கு மிக்க நன்றி.
அத்துடன் தங்களின் கவிதைகள் மற்றும் எழுத்துக்கள்
சிறக்க வாழ்த்துக்கள்.

வலைச்சுவடுகளில் உங்கள் சுவடுகள் ஆழப் பதிய வாழ்த்துக்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்