Friday, February 03, 2006

கால நதி

கால நதி

கொண்டாடியும்
குறை சொல்லியும்
பயணித்துக்கொண்டேயிருக்கின்றன
பல கோடி பாதங்கள்.
பாதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது
ஆழமானதொரு நதியைப் போல
அமைதியாக..!

புலன்களின் அனுபவச்சாயத்தை
பூசிக்கொள்ளும் பாதங்கள்
வேறு வழியின்றி
விமர்சிக்கத் தொடங்குகின்றன
பாதையினை.

பயணம் நின்றுப்போகும்
ஓர்பொழுதில்
பாதங்கள் ஆகிவிடுகின்றன
பாதையின் துளியாக...
குறைந்தபட்சம்
கண்ணுக்குத் தெரியாத
ஒரு ரேகையாக.!

4 comments:

பாலு மணிமாறன் said...

நல்ல கவிதை இப்னு... தொடரட்டும் உங்கள் பாதையும், பயணமும்...

Anonymous said...

வாழ்த்துக்கள் தங்களின் படைப்பு இன்றைய தினமலரில் அறிவியல் பக்கத்தில் (பெட்ரொல் - அரசின் பேட் ரோல்)

அன்புடன்
கீதா

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலு அவர்களே!
தங்களின் ஆக்கமும் ஊக்கமும் தொடரட்டும். மகிழ்ச்சி!

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதா அவர்களே!
தினமலரின் அங்கீகாரத்தை எனக்கு முதன் முதலில் தெரிவித்தவர்களுள் நீங்களும் ஒருவர். மகிழ்ச்சி!