Tuesday, February 24, 2009

வலைப்பதிவர்களிடம் பத்து கேள்விகள். :-)

வலைப்பதிவர்களிடம் பத்துகேள்விகள்

1). தமிழ்மணத்தைத் திறந்தவுடன் சூடான இடுகைகளை; மறுமொழியிடப்பட்டவற்றை நோக்கிப் பாய்கிறீர்களே..ஏன்?

2). சிலநிமிடங்களுக்கொரு முறை தன்னிச்சையாக தமிழ்மணத்தை மீள்திறப்பு (ரெஃப்ரெஷ்) செய்கிறீர்களே...ஏன்?

3). தெரியாதவர்கள் போடுவது பக்காப்பதிவாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல், தெரிந்தவர்கள் போடும் மொக்கைப்பதிவுக்கே பின்னூட்டுகிறீர்களே... ஏன்?

4). கவர்ச்சியான; அதிர்ச்சியான தலைப்புகளில் மயங்கிவிடுகிறீர்களே... ஏன்?

5). 'மீ த ஃபர்ஸ்ட்' என்ற பின்னூட்டத்திற்கு மட்டும் இவ்வளவு கிராக்கி ஏன்?
அதற்கப்புறமும் மீ த செகண்டு, மீ த தேர்டு அவசியமா? ரிப்பீட்டே அவசியமா :-))

6). பதிவையே படிக்காமல் 'மீ த ஃபர்ஸ்ட்டு' போட வேண்டியது அவசியம்- ஏன்?

7). சீரியஸான பதிவுகளுக்கு கூட்டத்தோடு ஆமாம்சாமி போடுவது ஏன்?

8). உங்கள் பிம்பத்திற்கு அப்பால் சொல்ல வேண்டிய கருத்துகளுக்கு வேறு பெயரில் அல்லது அனானியாக ப் போய் பின்னூட்டுகிறீர்களே.. ஏன்?

9). பின்னூட்டங்களை அதிகரிக்கும் வழியாக.. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்கிறீர்களே... ஏன்?

10). ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவது ஒரு சுழலில் (உதாரணம்: பத்து கேள்விகள்) சிக்கிக்கொள்கிறீர்களே.. ஏன்?

( பி.கு: பதிவுக்கு ஆலோசனை: 'இளமை விகடனில்' உனக்கென மட்டும் எழுதும் ஒரு மூத்த பதிவர்)

19 comments:

ராமலக்ஷ்மி said...

மூத்த பதிவர் இப்படி நீங்கள் கடைசியில் குட்டைப் போட்டு உடைப்பீர்கள் என்று கிஞ்சித்தும் எதிரே பார்த்திருக்க மாட்டார்:))))))!

நட்புடன் ஜமால் said...

\ ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவது ஒரு சுழலில் (உதாரணம்: பத்து கேள்விகள்) சிக்கிக்கொள்கிறீர்களே.. ஏன்?
\\

இது நல்ல கேள்வி ...

தமிழ் said...

/அப்பப்ப நம்ம வீட்டுக்கும் வந்து நலம் விசாரிக்கலாமே!/

வந்து விட்டேன் நண்பரே

தமிழ் said...

இது அத்தனைக்கும் என்னுடைய பதில்
இது தான்

பிடித்தவற்றை பாராட்டுவது
என்னுடைய இயல்பு

பின்னோட்டம் இடுவதில் கணக்கு வழக்கு பார்ப்பதில்லை

அதிலும் கவிதை என்றால் ஒரு அலாதி

வாழ்த்துகள்

தமிழ் said...

அவ்வளவு தான் தெரியுமுங்க

கோவி.கண்ணன் said...

:)

M.Rishan Shareef said...

தன் பாட்டுக்கு செவனேன்னு இருந்த சின்னப் பயபுள்ளயப் பத்தி கடைசி 2 வரில மூத்தபதிவர்னு எழுதி உசுப்பேத்தி விட்டுட்டீகளே அங்கிள்..இப்படித்தான் ஆராச்சும் அடிக்கடி ரணகளமாக்கிடறாய்ங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முரளிகண்ணன் said...

me the first

முரளிகண்ணன் said...

me the first

இப்னு ஹம்துன் said...

//மூத்த பதிவர் இப்படி நீங்கள் கடைசியில் குட்டைப் போட்டு உடைப்பீர்கள் என்று கிஞ்சித்தும் எதிரே பார்த்திருக்க மாட்டார்:))))))!//

ராமலக்ஷ்மி அக்கா,

அப்ப, நேரே பார்த்திருப்பார் என்று சொல்லவர்ரீங்களா? :-))

இப்னு ஹம்துன் said...

/// \ ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏதாவது ஒரு சுழலில் (உதாரணம்: பத்து கேள்விகள்) சிக்கிக்கொள்கிறீர்களே.. ஏன்?
\\

இது நல்ல கேள்வி ... ///


நட்பின் ஜமால்,
அப்ப... மத்ததுலாம்?

இப்னு ஹம்துன் said...

திகழ்மிளிர்,
ஒண்ணுக்கு மூணு பின்னூட்டம்,
பின்னிட்டீங்க!

இப்னு ஹம்துன் said...

கோவி கண்ணன்,

கேள்வி 3ஐ மீறிவிட்டதால் சின்னதா ஒரு சிரிப்பு சிரிச்சீங்களா?

இப்னு ஹம்துன் said...

ரிஷான் தாத்தா,
ஏண்டா இவன எழுதச் சொன்னோம்னு ஆயிடுச்சா :-)))

இப்னு ஹம்துன் said...

முரளி கண்ணன்,

me the first இவ்ளோ லேட்டா வர்ற me the first இதுதான் first :-))

முதல் வருகைக்கு நன்றி

பாச மலர் / Paasa Malar said...

மூத்த பதிவர் பற்றியதுதான் நல்ல பஞ்ச்..

இப்னு ஹம்துன் said...

பாசமலர் அக்கா,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீக,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆதவா said...

நல்ல நல்ல கேள்விகள் தான்.. ஹே ஹே ஒரு சில கேள்விகளிலிருந்துத நான் தப்பிவிட்டேன்..!!!!

Anonymous said...

அப்புறம் இருவரே பல பின்னூட்ட்ங்கள் போடுவது ஏன்?