பொங்கித் தணியும்
பூக்கள் நிரம்பிய
கடல்பரப்பில்
நாசிக்கேங்கும் மணம்.
நாளையுடனொரு கண்ணாமூச்சி ஆட்டம்.
நழுவிக்கொண்டிருக்கிறது இன்று!
முறுக்கப்பட்ட உடல்களிலிருந்து
சொட்டுகிறது நீர்
பாலையிலும் பூக்கின்றன
வெண் மல்லிகைகள்.
வசிக்கும் கனவுகளிலிருந்து
வம்படியாக வெளியேற்றுகிறது
கடன் தீர்க்கக் கோரும் கடிதம்.
தூரத்தைக் குறைத்து
பாரத்தைக் கூட்டுகிற
தொலைபேசிகள் அறிவதில்லை
இன்னும் மீதமிருக்கின்றன
பேசப்படாத சொற்கள்.
நன்றி: கீற்று
5 comments:
/////தூரத்தைக் குறைத்து
பாரத்தைக் கூட்டுகிற
தொலைபேசிகள் அறிவதில்லை
இன்னும் மீதமிருக்கின்றன
பேசப்படாத சொற்கள்./////
மிக அழகிய கவிதை வரிகள் வாழ்த்துக்கள்.
தோழர் ஹம்துன் அவர்களுக்கு என் வெண்பா எழுதலாம் வாங்க தளத்தில் வெண்பா விளையாட்டைத் துவங்கி நடத்திவருகிறேன். நான் என் வலையில் வழங்கும் ஈற்றடிகளுக்கு தங்களை வெண்பா எழுத வருக வருக வருக என வரவேற்கிறேன். வருக! ஈற்றடிக்குக் கவிதை தருக!
tamil paiyan,
உங்கள் ஆயத்த பாராட்டுக்கு நன்றிகள்.
தோழர் அமுதா அவர்களே..
உங்களின் ஊக்கத்திற்கும் பாராட்டுக்கும் தோழமைக்கும் நன்றி உடையவனாகிறேன்.
Really good one. Hope you visited my blog. Thanks for the comments. Let me go through your other poems and let you know my feedback.
Post a Comment