நகையே!
அக்கா வரும்போதெல்லாம்
நடக்க வேண்டியிருக்கிறது
அடகு கடைக்கு.
தங்கச்சிக்காகவும் இனி
தனியாக வாங்கிச் சேர்க்கணும்
கல்லூரிக்கனவில்
மூழ்கியிருக்கும் தம்பிக்கு
கைகொடுக்க காத்திருக்கும்
அம்மாவின் தாலிக்கொடி
இன்னமும் மீட்கப்படவேயில்லை
அண்ணனின் பயணத்திற்காக வைத்த
அண்ணியின் வளையல்களும்
அவளுடைய வாழ்க்கையும்!
அணிவதற்கன்று;
அவசரத்திற்கென்று
ஆகி விட்ட உனக்கு
நல்ல பெயர் தான்
நகையே!
xxxxxxxxxxxxxxxxx
(பி.கு: இக்கவிதை கீற்றில் மலர்ந்துள்ளது. வலைப்பூவில் பதியாமல் வேறு மின்னிதழ்களில் என் சில கவிதைகள் இடைப்பட்ட நாட்களில் வெளியாகியுள்ளன. வாய்ப்பு கிடைக்கும் போது ஒவ்வொன்றாக இங்கு பதிகிறேன்)
10 comments:
நல்லக் கவிதை
நல்ல கவிதை இப்னு....
பொருள் போதிந்த நல்ல கவிதை.
=இஸ்மாயில் கனி
பொருள் பொதிந்த நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
=இஸ்மாயில் கனி
நகை அப்டின்னு பேர் வச்சது யாருங்க? பெண்களூகுத் தான் இது 'நகை' ஆண்களூக்கு ....?
நல்ல கவிதை.
நகைன்னு இதுக்கு யாருங்க பேர் வச்சது? பெண்களுக்கு வேண்டுமானால் இது 'நகை'.. ஆண்களுக்கோ 'எள்ளி நகை'
எதார்த்தத்தை எளிமையாக சித்தரித்த வலிமையான கவிதை. வாழ்த்துக்கள்..
பிறைநதிபுரத்தான்
எளிமையான கவிதை. எனக்கே புரிஞ்சதுன்னா பாருங்க.
நகை வாங்கறதே இப்படி ஆத்திர அவசரத்துக்கு உதவுமுன்னுதான்.
நல்ல கவிதை பஃக்ருதீன். பாராட்டுக்கள்.
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
Post a Comment