Tuesday, October 25, 2005

பெட்றோல்-அரசின் BAD ROLE

ஊன்றுகோல்களின் உதவியுடன் நடைபயிலும் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதுவரை பெரிய அளவில் தடுக்கி விழுந்துவிடவில்லை எனினும் 'இடது' பக்க ஊன்றுகோல் அடிக்கடி 'இடக்கு' செய்து வருவதை குறிப்பிடாமலிருக்க முடியாது.

அவற்றுள் நியாயமான இடக்குகளும் உள்ளன என்பதற்கு ஐந்து முறை ஏற்றப்பட்ட பெட்றோல் விலையேற்றத்துக்கான எதிர்ப்பை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்-எதிர்பார்த்த அளவுக்கு பற்றி எரியாவிட்டாலும்!

டெல்லி போன்ற பெரு நகரங்களில் ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்கப்படுகிற பெட்றோல், உள்நாட்டு கிராமங்களில், குறிப்பாக பெட்றோல் பங்க் இல்லாத கிராமங்களில் ரூபாய் 54/=வரை விற்கப்படுகிறது.

"எந்த அரசாக இருந்தாலும் பெட்றோல் விலை ஏற்றத்தை தடுக்க முடியாது" என்றும், 'கடந்த அரசுகளும் பெட்றோல் விலையை ஏற்றவே செய்தன" என்றும் கருணாநிதி போன்றவர்கள் தடுப்பாட்டம் ஆடினாலும் கூட காம்ரேடுகளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.

ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற பெட்றோலிய சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு வரிச்சலுகையாக கோடிக்கணக்கான ரூபாய்களைத் தாரை வார்ப்பதை தடுத்திருக்கலாம்.

ரிலையன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே - பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் மட்டும்- 10,000/ கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளது (நன்றி: ஜூ.வி). இந்த வரி பாக்கிகளை எந்த அரசாங்கமும் வசூலிக்க முன் வருவதில்லை.தேசிய கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சில கோடிகளை அன்பளிப்பாக வழங்கிவிடுவதனால், இந்நிறுவனங்களின் வரி ஏய்ப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.கடுமையாக விலை ஏறி விட்ட இந்நாளிலும், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு அரசுக்கு ரூ.17/=மட்டுமே அடக்க விலையாகிறது. பெட்ரோலின் விலையில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகை அரசு சாமானியர்கள் மீது விதிக்கும் வரிச்சுமையே!

பெட்றோலிய உற்பத்தியில் சற்றொப்ப இந்தியாவின் நிலையிலேயே உள்ள பாகிஸ்தான்,மலேசியா போன்ற நாடுகளில் இன்னமும் பெட்ரொல் விலை இன்னமும் ரூ.17/= என்ற அளவில் தான் விற்கப்படுகிறதாமே. (அறிந்தவர்கள் தெரிவிக்கவும்)

அரசாங்கத்தின், அதன் கட்சிக்காரர்களின் வழக்கமான பல்லவி: "வேறு வழியில்லை"

பொது மக்களின் மனப்பான்மைக்கும் தான். சகித்துக்கொள்ளும் போது மாத்திரம்.

12 comments:

இப்னு ஹம்துன். said...

பரிசோதனை

மூர்த்தி said...

http://www.kshitij.com/research/petrol.shtml

http://www.mca.org.my/story.asp?file=/articles/exclusive/2005/8/44309.html&sec=Exclusive

இப்போது மலேசியாவில்
RM1.52 per litre
diesel is 108.1 sen per litre(RM1.081)

விற்கப் படுகிறது.

Anonymous said...

பெட்ரோலுக்கு மாற்றாக வந்த பயோடீசலின் நிலை எப்படி உள்ளது.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

பெட்ரோலுக்கு மாற்றாக வந்த பயோடீசலின் நிலை எப்படி உள்ளது.

இப்னு ஹம்துன். said...

தகவலுக்கு நன்றி மூர்த்தி அவர்களே!
இப்பதிவு பேசும் தார்மீக நியாயம் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

நன்றி கல்வெட்டு!
பயோ டீசல் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லையே...

Anonymous said...

//பாகிஸ்தான்,மலேசியா போன்ற நாடுகளில் இன்னமும் பெட்ரொல் விலை இன்னமும் ரூ.17/= என்ற அளவில் தான் விற்கப்படுகிறதாமே.//

கீழ்கண்ட காரணங்களால் இருக்கலாம்:

1) பாகிஸ்தானுக்கு வளைகுடா நாடுகள் சலுகை விலையில் கொடுப்பதால்?

2) மலேசியாவில் உளநாட்டு உற்பத்தியும் தேவையும் பேலண்சாக இருப்பதால்?

3) இலவச சலுகைகளுக்காக மேற்சொன்ன நாடுகளில் கம்யூனிஸ்டுகள் தேவையில்லாத போராடங்களில் ஈடுபடாததல் அல்லது இல்லாததால்?

நல்லடியார் said...

மேலே உள்ளது என் கமெண்ட் தான்!

;-)

இப்னு ஹம்துன். said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நல்லடியார் அவர்களே!
மலேசியா, பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் பெட்ரோல் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
ஆனால், பண முதலைகளுக்கு நம் நாட்டில் அளிக்கப்படுகிற வரிச்சலுகையும், கண்டுக்கொள்ளாமல் விடப்படுகிற அவர்களின் வரிஏய்ப்பும் நம்மைப்போன்ற சாமானியர்களின் தலையில் தான் விழுகிறது என்பதை நாம் மறுக்க இயலாது.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இந்தப் பதிவுக்குச் சம்பந்தமில்லாதது....

பொங்கல் வாழ்த்துகள்.
நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் பொங்கட்டும்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

மாயவரத்தான்... said...

About ur blog in today's dinamalar...


http://www.dinamalar.com/2006feb09/flash.asp

இப்னு ஹம்துன். said...

நன்றி கல்வெட்டு அவர்களே!
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

நன்றி மாயவரத்தான் அவர்களே. மகிழ்ச்சி!

Anonymous said...

Mr Ibnu Humdun,

I have seen your message. Its really shame to us; bcause most of us don't know the real situation. And tell me is it possible to put a case against our government regarding this issue..
Thanks for your initiative..