விடுமுறை பயணக்குறிப்புகள்.
வருடங்கள் சிலவற்றுக்குப்பின்
ஊருக்குப் போயிருந்தேன்.
பெண்ணாகிவிடும் பேராசையில்
அறுவை சிகிச்சை எதற்கும்
ஆயத்தமாகவே இருக்கும்
ஆணுமல்லாததைப் போலிருந்தது அது.
கடைவீதிகளின் காரணப்பெயர்
கீழே வீழ்ந்திருக்க
வீதிகளெங்கும்
விளைந்திருந்தன கடைகள்.
வியாபாரமும் பரவாயில்லை!
கலப்படங்களைப் போலவே
‘களை’ கட்டியிருக்கிறதாம்
புழுதி பறந்த செம்மண் சாலைகளில்
தார் ஊற்றப்பட்டிருந்தது.
இயற்கைத்தரையில்
ஆடப்பட்ட பால்ய விளையாட்டுக்களை
இன்னமும் நவீனமாக
செயற்கைத்திரையில்
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
கண்ணாடி அணிந்த
இன்றையச் சிறுவர்கள்.
‘பள்ளிக்கூடம் மட்டும் இப்போ
பத்து இருக்கு-ஊருல.
பத்தாது - இன்னும் வேணும்
பசங்களும் படிக்கிறாங்க நல்லா..’
‘வேலைப்பிச்சை கேட்கவோ...?
வேலைப்பிச்சை போக்கவோ...?’
‘எல்லா கிராமங்களுக்குள்ளும்
நுழைந்து வந்து விடுகின்றன
எங்கள் அரசுப் பேருந்துகள்’
‘ஜனங்களின் அன்னியோன்னியங்கள்
உடைந்துப்போய்
அந்நியங்களாகவும்
அந்நியங்களாகவுமே பார்க்கிறார்கள்
சக மனிதங்களை’
பழைய சில முகங்களைத்
துழாவும் கண்களை
பராக்கு பார்க்கின்றன
புதிய சில முகங்கள்.
இன்னும் மாறாமலே இருப்பது
இந்த மின்சாரம் தானாம்.
அது பெறும் மின் அழுத்தத்திலும்
அது தரும் மன அழுத்தத்திலும்.
‘எப்போ வரும்?’
‘எப்போ வருமுன்னு தெரியாது’
எப்போ போகுமுன்னு தெரியும்
சரியா வெளக்கு வெக்கிற நேரத்துல போயிடும்’
இப்போதெல்லாம் மின்சாரத்தை
அதிகம் சபிப்பது
இளம் பெண்கள் தானாம்
தொலைக்காட்சித் தொடர்களுடன்
அவர்களுடைய நெருக்கம் அப்படி.
ஆயிரம் தான் சொன்னாலும்
திரும்பவும் புறப்படும் சமயம்
மனம் சொன்னது:
'தங்கி விடலாமே..’
அறிவு சொன்னது:
‘வாழ்க்கை என்பது
தங்கிவிடுதல் அல்ல..’
--------------------------------------------------
13 comments:
வணக்கங்கள் நண்பரே.
நோஸ்டால்ஜிக் நியாபகங்களையும் நடைமுறையையும் தொட்டுப் பார்த்திருக்கீறீர்கள்.
என் நண்பர் அடிக்கடி சொல்வார், எப்பொழுது நீ ஞாபகங்களை கவிதையாக்குகிறாயோ அது கண்டிப்பாக அழகாகத்தான் இருக்கும் என்று.
கொஞ்ச நேரம் சொந்த ஊருக்கு போய்விட்டு வந்த திருப்தி இருந்தது. நடைமுறை சுடுவதைத் தான் மனது ஏற்க மறுக்கிறது.
ஒரே ஒரு விமர்சனம். இன்னும் கொஞ்சம் கவித்துவமாக சொல்லவும் எழுதவும் முயலுங்கள்.
கருத்தின் ஆழம் உருவில் கொஞ்சம் குறைகிறது.
வணக்கங்கள் நண்பரே.
நோஸ்டால்ஜிக் நியாபகங்களையும் நடைமுறையையும் தொட்டுப் பார்த்திருக்கீறீர்கள்.
என் நண்பர் அடிக்கடி சொல்வார், எப்பொழுது நீ ஞாபகங்களை கவிதையாக்குகிறாயோ அது கண்டிப்பாக அழகாகத்தான் இருக்கும் என்று.
கொஞ்ச நேரம் சொந்த ஊருக்கு போய்விட்டு வந்த திருப்தி இருந்தது. நடைமுறை சுடுவதைத் தான் மனது ஏற்க மறுக்கிறது.
ஒரே ஒரு விமர்சனம். இன்னும் கொஞ்சம் கவித்துவமாக சொல்லவும் எழுதவும் முயலுங்கள்.
கருத்தின் ஆழம் உருவில் கொஞ்சம் குறைகிறது.
அன்பின் கணேஷ்!
உங்கள் பாராட்டு ஊக்கமூட்டுவதாகவும் விமர்சனமும் உரமூட்டுவதாகவும் உள்ளன. நன்றி.
தொடர்ந்து ஆலோசனைகளைத் தாருங்கள்.
நல்ல கவிதை.
நீங்கள் சவுதி அரேபியாவில் எங்கே இருக்கிறீர்கள்?
Dear KVR
Thanks for your appreciations.
I am in Riyadh at Present.
Dear Fakrudeen,
Fantastic Kavithai....
my best wishes...
k
vazhga...valarga...
-S.N.shajahaan
Riyadh.
இராஜ. தியாகராஜனின் வணக்கம்.
நண்பரே நல்ல கருத்து,
------------------------------
"என்னை ஈர்த்த வரிகள்:
ஜனங்களின் அன்னியோன்னியங்கள்
உடைந்துப்போய்
அந்நியங்களாகவும்
அந்நியங்களாகவுமே பார்க்கிறார்கள்
சக மனிதங்கள்"
-----------------------------
இது என்னுடைய "விடை தேடும் வினாக்கள்" எனும் ஆசிரியப்பா வகைப்பாடலின் சிலவரிகள்: ஒரே லயத்தில் வரும் சிந்தனைகள்.
-----------------------------
"«ñ¨¼ Áì¸û Å£ðÊø ¿¢¸Øõ
ºñ¨¼, §º÷쨸, º¸Ä ¿¼ôÀ¢ý
Å¢ºÉó ¾ý¨É ÅÄ¢ó§¾ ÅóÐ
¯º¡Å¢ ÂÈ¢Ôí ¸Ã¢ºÉ எங்கே?"
------------------------
அன்புடன்
இராஜ. தியாகராஜன்.
http://www.pudhucherry.com
முன்னர் இட்டது திஸ்கியில் விழுந்த்துவிட்டது. மன்னிக்கவும்.
இதோ ஒருங்குறி முறையில் இடுகிறேன்.
-------------------------------
"அண்டை மக்கள் வீட்டில் நிகழும்
சண்டை, சேர்க்கை, சகல நடப்பின்
விசனந் தன்னை வலிந்தே வந்து
உசாவி யறியுங் கரிசன எங்கே?"
-------------------------------
அறிவு சொன்னது:
‘வாழ்க்கை என்பது
தங்கிவிடுதல் அல்ல..’
wow. அருமை.
நன்றி கீதா அவர்களே...
கவிதைகளில் ஈடுபாடு மிக்க
தங்களின் கருத்தை தொடர்ந்து தெரிவித்து வாருங்கள். என் போன்றவர்களின் இலக்கியப்பங்களிப்பை அது மென்மேலும் மெருகேற்றும்.
நல்ல கவிதை மழழையின் சிரிப்பு போன்றுஇருந்தது
Post a Comment