Sunday, February 06, 2005

சோகவனத்துச்சீதைகள்!

அழகும் இளமையும்
அலங்கரித்த

அந்த நாட்களில்
எங்கள் கனவுகளில்
எப்போதும் பிருத்வி ராஜன்களே...!

ஆயினும்...
செல்வம் இல்லாத

சோமநாதபுரங்களை
எந்த கஜினிமுகமதும்
ஏறெடுத்துப்பார்ப்பதில்லை
என்பதை அறிந்தப்பின்...
இப்போதெல்லாம்...
அசோகவனத்தில் அல்ல,
சோகவனத்தில்காத்திருக்கிறோம்.
‘ ராவணனாவது வரமாட்டானா…’?

6 comments:

Anonymous said...

நறுக்குன்னு ஒரு கவிதை.நைஸ்

Anonymous said...

நல்லா இருக்கு..
அன்புடன்,
கனேசன்,

Anonymous said...

அருமையான கவிதை

அபூ முஹை said...

தட்சணை வாங்கும் வரன்களை நாசுக்காகக் குட்டியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்.

Anonymous said...

அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள், வலைப்பூக்களில் கவிதை எழுதுபவர்கள் சற்றூ குறைவுதான், பின்னூட்டங்களும் குறைவாகத்தான் இருக்கும், இருந்தாலும் எழுதுங்கள்,தினமும் குறைந்தது ஒருமுறையேனும் வந்து பார்க்கும் வலைப்பூக்களில் உங்களுடையதும் ஒன்று.
குழலி

Anonymous said...

YOUR POEMS ARE SUPERB.PUBLISH ATLEAST ONE POEM DAILY.SELECT POEMS WRITTEN BY YOUR READERS/FRIENDS.WORDS EXPRESSED IN POEMS COME FROM HEARTS.THE PEOPLE IN THE WORLD WILL BE UNITED BY READING SUCH WORDS. BEST WISHES TO YOU AND YOUR FAMILY MEMBERS. G.S.KRISHNAN (MUMBAI) 18/2/2006