Sunday, February 13, 2011

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

ஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்?

எனக்கு வந்த ஒரு மடல் கீழே சாய்வெழுத்துகளில் :

அமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன்,
க்வாட்ரில்லியன், குயின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை
நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303
ஸைஃபர் போடவேண்டும்).

ஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை
கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி
என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில்
கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், அதற்கு மேல் வார்த்தை
தேவைப்படவில்லை. ஆனால், இப்போதெல்லாம் ஒரு ஊழல் மட்டுமே ஒரு லட்சத்து 76
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடத்தப்படுகிறது.

வருகிற காலத்தில் கோடி கோடி ஊழல் எல்லாம் வரக்கூடும். எனவே, கோடிக்கு
மேல் புதிய சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு
ஏற்பட்டுள்ளது.

இதை வைத்து நம் இன்டெர்நெட் அரசியல் ஆர்வலர்கள் விளையாட ஆரம்பித்து
விட்டார்கள். எப்படி ?

1000 கோடி = 1 ராடியா
10,000 கோடி = 1 கல்மாடி
1,00,000 கோடி = 1 ராசா

ஆக, இனிமேல் பெரிய தொகைகளைக் குறிக்கும் தகவல்களைக் கீழ்க் கண்டவாறு
குறிப்பிடலாம்:

அனில் அம்பானி புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு சுமார்
4.5 ராடியா ரூபாய் (4,500 கோடி ரூபாய்) மதிப்பிருக்கும்.

ஆண்டுதோறும் கெரஸினுக்கு மத்திய அரசு வழங்கும் மான்யம்
2 கல்மாடி ரூபாய் ஆகும் (20,000 கோடி ரூபாய்)

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் தொகை
50 ராசா ரூபாய் (50 லட்சம் கோடி ரூபாய்) இருக்கக் கூடுமெனத் தெரிகிறது.

-இந்த ஐடியாவை மத்திய அரசு பரிசீலிக்கலாம்.
------------------------------
----------------------------------------
நன்றி : துக்ளக் வார இதழ் 16.02.2011
----------------------------------------------------------------------நகைச்சு வைப்பதற்காக மேலுள்ளதைக் குறிப்பிட்டாலும்,

உண்மையில் கோடிக்கு அப்பாலும் எண்களைச் சொல்வதற்கு தமிழில் முடியும் என்று தொல்காப்பியம் சுட்டுகிறது:

ஒன்று = 1
பத்து = 10
நூறு = 102
ஆயிரம் = 103
பத்தாயிரம் = 104
நூறாயிரம் = 105
பத்து நூறாயிரம் = 106
கோடி = 107
தாமரை (=கோடிகோடி) = 1014
வெள்ளம் (=கோடிதாமரை) = 1021
ஆம்பல் (=கோடிவெள்ளம்) = 1028

இன்று படித்த ஒரு செய்தி இங்கே கூறத்தக்கது:

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை "ஜீரோ'? பதிலளித்த மாணவிக்கு ரூ. 10 ஆயிரம்.

7 comments:

Anonymous said...

1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம் -????????????????

ஹைதர் அலி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
என் சகோதரனை

வாழ்த்துக்கள் சகோ

தொடர்ந்து எழுதுங்கள்

இப்னு ஹம்துன் said...

நன்றி அனானிமஸ்

அரிய தகவல்கள்.

உங்கள் பெயரையும் எளிதாகக் கூறியிருக்கலாமே !

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் உளப்பூர்வமான அன்புக்கும் நன்றி சகோ. ஹைதர்அலி

விரைவில் நாம் சந்தித்துப் பேச வேண்டுமே !:-)

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு வாழ்த்துக்கள் கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.

ஒ.நூருல் அமீன் said...

ஆபிதீன் பக்கங்கள் மூலம் வந்தேன். புதிய தகவல்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.