எது சிறப்பு!
மலரதனின் சிறப்பென்றால் மகிழ்ச்சித் தோற்றம்
மனங்கனியச் செய்வதிலே மிகவும் ஏற்றம்
நிலவதனின் சிறப்பதுவோ நிலைகள் மாற்றம்
நிறைந்தாலும் மறைந்தாலும் நிலைக்கும் ஆற்றல்
உலகமிதன் சிறப்பென்ன? வேறு பூக்கள்
ஒருசேரப் பூத்திருக்கும் இயற்கைப் பூங்கா
உலவுகின்ற தென்றலுக்கும் உண்டே பேறு
உள்ளபடி பொதுவுடமை விளங்கும் காற்றே
.
தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
தக்கபடி பணிமுடிக்க தேரும் ஆட்கள்
கலைமனதின் சிறப்பிங்கே கற்பின் வாய்மை
கலங்காமல் ஒளிவீசும் கனலின் தூய்மை
அலைமுழக்கம் சிறப்பில்லை: ஆழி என்றால்
ஆழம்தான் சிறப்பாகும் அறிஞர் போல!
நிலைமறந்தே ஆடுவோரின் நினைப்பைக் கூட
நீக்கிவிடும் சிறப்பிங்கே நல்லோர்க் காமே
நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்
மண்ணிதனின் சிறப்பிங்கே மனிதம் ஓங்கல்
மற்றவரும் தன்போன்றே மனதில் கொள்ளல்.
கண்விழிகள் சிறப்படையும் காணும் நோக்கில்
கருத்தான ஏதொன்றும் கவர்ந்துக் கொண்டால்.
பெண்ணவளும் சிறப்பன்றோ பேணும் தாய்மை
பொறுமையினால் அடைகின்றாள் பெரிய வெற்றி.
சிலமனிதர் சிறப்பின்றி சின்ன புத்தி
சிந்தையிலே சுயநலமே செய்யும் உத்தி
பலமனிதர் சிறப்பிங்கே பாவம் ஐயோ.
பண்பாட்டைச் சிதைப்பதிலே பெருமை கொள்வார்
உளமகிழச் செய்வதுவே உயர்ந்தோர் செய்கை
ஒருவரையும் இகழாமல் உணரும் போக்கு.
புலவரிவர் சிறப்பிங்கே பொறுமை காத்து
புகழோங்க கவிவானில் ஒளிரும் பாடல்!
12 comments:
//நண்பர்தம் சிறப்பெல்லாம் நலமே செய்தல்
நம்பிக்கை நீட்டியொரு நேசம் பெய்தல்..// எப்படி உங்காளால் மட்டும் இதுபோல் அழகாய் எழுத முடிகிறது? சீக்கிரமாய் உங்க கவிதை தொகுப்புகளை நூலாக வெளிவர வேண்டி காத்திருக்கும் உங்கள் அன்பு நண்பன்
nalla kavithai.
thodarka.
vaazhthukkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com/
அருமையாக எழுதறீங்க.
MGF,
உங்கள் அன்புக்கு நன்றி.
இன்ஷா அல்லாஹ் சொல்லி வைக்கிறேன்.
//முல்லை அமுதன் said...
nalla kavithai.
thodarka.
vaazhthukkal.
mullaiamuthan
http://kaatruveli-ithazh.blogspot.com///
முல்லை அமுதன்,
முதல் வருகைக்கும் பாராட்டுக் கருத்துக்கும் நன்றி.
இதோ வருகிறேன், உங்களை வாசிக்கவும்.
சகோ. ஆசியா உமர்,
முதல் வருகைக்கும், அழகுக் கருத்துத் தருகைக்கும் நன்றி.
கவிதைகள் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!
கவிதைகள் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
என்னுடைய நண்பன் இப்னு ஹம்துன் பரங்கிப்பேட்டை பக்கி தேடிகிட்டே இருக்கேன் பார்த்தால் கொஞ்சம் தகவல் கொடுங்கள்
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு

Post a Comment