Thursday, March 12, 2009

கனவின் திசைகளுக்கப்பால்...........


கனவின் திசைகளுக்கப்பால்.....


காதலின் திரை மறைத்த
பொய்களுக்குப் பின்னே
நாம் நாயகர்களானோம்
நமக்குள்ளே.

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்

காலத்தின் நிர்வாணத்தில்
கண்டுகொண்டோம்
நாம் நம்மை.

அதன்பின்
ஆடைகள் குறித்த
அலட்டல்கள் தவிர்த்தோம்

ஒப்பனைகள் மாற்றாத
'உள்'நிறத்தில்
அந்த அந்தகார ஆழத்தில்
இன்னும் வசீகரித்தபடி
ஒரு மலர்.


(உயிரோசையில் வெளியாகியிருக்கிறது)

16 comments:

Thamiz Priyan said...

அழகா எழுதி இருக்கீங்க..:)

இப்னு ஹம்துன் said...

முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தமிழ் பிரியன்.

தமிழ் பிரியன் = தமிழ்ப்பிரியன் அல்லவா! :-))

www.narsim.in said...

//வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்//

நல்லா இருக்குங்க..

உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்..

மாதவராஜ் said...

//ஒப்பனைகள் மாற்றாத
'உள்'நிறத்தில்
அந்த அந்தகார ஆழத்தில்
இன்னும் வசீகரித்தபடி
ஒரு மலர்.//

அட...!

Mahesh said...

//கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது //

அருமை... அருமை...

ஹேமா said...

//அதன்பின்
ஆடைகள் குறித்த
அலட்டல்கள் தவிர்த்தோம்.//

இப்னு,அசத்தலான உண்மை.எமக்கென்று ஒரு பாதையில்
நடக்கையில் அடுதவரைப் பற்றிய கவலையே இல்லை.அழகான சிந்தனை.

இப்னு ஹம்துன் said...

நர்சிம் அண்ணே,

வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

மாதவராஜ் சார்,

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இப்னு ஹம்துன் said...

மகேஷ்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

இப்னு ஹம்துன் said...

சகோதரி ஹேமா,
மிகச்சரியாக சொல்லி என் கவிதைச்சிந்தனைக்கு ஊக்கம் தந்திருக்கிறீர்கள்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

ஆர்.வேணுகோபாலன் said...

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்

அற்புதமான சிந்தனை! அருமையான கவிதை!

தமிழன் வேணு

புதியவன் said...

//கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்//

அருமையான வரிகள்...முதன் முறையாக உங்கள் தளம் வந்து ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி...உயிரோசையில் கவிதை வந்ததற்கு வாழ்த்துகள்...

இப்னு ஹம்துன் said...

//வேணு said...

கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்

அற்புதமான சிந்தனை! அருமையான கவிதை!

தமிழன் வேணு //********

வேணு ஐயா,
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

இப்னு ஹம்துன் said...

புதியவன்,
தங்களின் புதிய வருகைக்கும் பாராட்டு+வாழ்த்துகளுக்கும் நன்றி!

ஆதவா said...

கலக்கல் கவிதைங்க... உயிரோசையில் வந்திருபது சிறப்பு!!!

கனவில் நெய்த அங்கி...

இந்த வரிகள் ரொம்பவும் கவர்ந்துவிட்டது!!

(என் பதிவுக்கு வந்தமைக்கு நன்றி இப்னு!!)

இப்னு ஹம்துன் said...

ஆதவன் சார்,
உங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. நன்றி

M.Rishan Shareef said...

கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது நண்பரே...
ஒவ்வொரு வரியும் எவ்வளவு அழகாக இருக்கிறது.

//கனவில் நெய்த அங்கி
வாழ்வின் முட்களில்
கிழிபடுகிறது எப்போதும்//

எனக்கு மிகவும் பிடித்த வரிகள் !

தொடருங்கள் நண்பரே !