இன்று வேறுநாள்
நேற்றைப்போலில்லை....
கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு
வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்.
இரத்தம் வெளிறி
உறைந்து கிடக்கின்றன
இரவு பகல்கள்
பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை.
காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.
நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!
நன்றி: கீற்று . (06 06 2007)
10 comments:
நல்லதொரு கவிதை. தற்போதைய என் மனநிலையைப் பொறுத்திப் பார்த்திக்கொள்ள இயலுமாக இருப்பதனால் மிகவும் உணர்வுபூர்வமான கவிதையாகவும் உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே !
Hi
உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
\\காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.\\
மிகவும் இரசிக்கும்படியாக உள்ளது
நன்றி ரிஷான்,
வலைப்பூவில் தொடர்ந்து இயங்கவைக்கும் உங்கள் ஊக்கத்திற்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நன்றியும்
நன்றி வலைப்பூக்கள்
நன்றி நட்புடன் ஜமால்.
நீங்கள் இரசித்த வரிகளையே பலரும் சுட்டினார்கள்.
//நேற்றைப்போலில்லை....
கணப்பொழுதில் நீண்டுவிட்டது
வெயிலின் கொடு நாவு //
இங்கு வெயில் என்பதை தனிமை என்பதன் குறியீடாக பார்க்க பல பரிமாணங்களைத் தருகிறது கவிதை..
//வெளியெங்கும்
பரவியிருக்கும் வெறுமை
முகத்திலறையும் பூதம்.
இரத்தம் வெளிறி
உறைந்து கிடக்கின்றன
இரவு பகல்கள் //
முகத்திலறையும் வெறுமையின் தாக்கத்தால் வெளிறிப் போயிருக்கின்றன என்றதோடு தொடரும் வரிகளில் அழகான
உவமானம் இரவு பகல்களுக்கு..
//பொருள் பிரிக்க..
சக்தி இழக்கிறது வாழ்க்கை.//
பொருள் தேடி புலம்பெயர்ந்ததை
இப்படியும் சொல்ல முடியுமா..
வியக்கிறேன் நண்பா..
//காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்
சிந்தியபடி மனம்.//
காலடித்தடங்களில் ஞாபககத் துணுக்குகளைத் தேடி என்று
வந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்று தோன்றுகிறது நண்பா.. நல்ல சொல்வீச்சு..
நீ ஊருக்குப் போய் என்ற ஒற்றை வார்த்தைக்கான கணம் தாண்டி வேறொன்றையும் அரற்றி நிற்கிறது இக்கவிதை..
ஷாஜி,
உங்கள் வருகையில் மகிழ்ந்தேன் நண்பரே!
விரிவான உங்கள் விமர்சனப் பாராட்டுக்கும் உள்ளத்து நன்றி.
"காலடித்தடங்களில்
ஞாபகத்துணுக்குகள்" அருமையான வரிகள்.
பிரிவின் துயரம் அற்புதமாக விழுந்திருக்கிறது கவிதையில்
நன்றி டொக்டர் எம்.கே.எம்,
உங்கள் முதல்வருகையிலும், பாராட்டிலும் மகிழ்கிறேன்.
Post a Comment