Wednesday, February 04, 2009

மெளனங்கள்.


முட்டைகளை ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.

வெண்மையாலான ஓடு
வெளித்தெரியும்
சமாதானமாகவோ...
சம்மதமாகவோ...!

உள்ளிருப்பு தெரிவதில்லை
உடையும் வரை!

பொறுமை காத்து
பிரசவிக்கச் செய்யலாம்
புதிய பிறப்பை!

எனினும்..

உடைக்கப்பட்டே
உட்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலும்!


இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.


(உயிரோசை மின்னிதழில்
வெளியாகியிருக்கிறது).

7 comments:

ராமலக்ஷ்மி said...

//முட்டைகளை ஒத்திருக்கின்றன
மெளனங்கள்.//

இதுவரை யாரும் சிந்தித்திராத ஒப்பீடு.

அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

//இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.//

மிக அற்புதமாக முடித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

M.Rishan Shareef said...

அன்பின் இப்னு ஹம்துன்,

எளிமையான வரிகளைக் கோர்த்து ஒரு அருமையான கவிதையை யாத்திருக்கிறீர்கள். மிகவும் அழகாக வந்திருக்கிறது கவிதை. அது கொண்டிருக்கும் கருப்பொருள் யாரும் தொட்டிராத அழகிய சிந்தனை.
வாழ்த்துக்கள் நண்பரே..இன்னும் நிறைய எழுதுங்கள் !

ஆதவா said...

மிக வித்தியாசமான முயற்சி.. முட்டைகளும் மெளனமும் வித்தியாசமான கருக்களன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

இப்னு ஹம்துன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ. ராமலக்ஷ்மி.

வலைப்பூக்கள், நன்றி.

அன்பின் ரிஷான், உங்கள் ஊக்கம் நெகிழ்வளிக்கிறது. நன்றி,நன்றி

ஆதவா அவர்களே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

GOWRI said...

மிக வித்தியாசமான ஒப்பீடு...
//உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.//

அருமை இப்துன்

ஹேமா said...

இப்னு,உண்மையில் சிந்தனையின் உச்சம் என்பதுபோல.மௌனத்தையும் முட்டையையும் தொடர்பு படுத்தி தொட்டுப் பார்த்திருக்கிறீர்கள்.

//இன்னமும்
உடைக்கப்பட முடியாமலிருக்கும்
ஒற்றை முட்டையில்
உறைந்திருக்கலாம்
ஓர் மகா நிசப்தம்.//

உங்கள் சிந்தனையின் தெறிப்பு இங்கு அசத்தலாக.அருமை.