Tuesday, October 25, 2005

பெட்றோல்-அரசின் BAD ROLE

ஊன்றுகோல்களின் உதவியுடன் நடைபயிலும் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இதுவரை பெரிய அளவில் தடுக்கி விழுந்துவிடவில்லை எனினும் 'இடது' பக்க ஊன்றுகோல் அடிக்கடி 'இடக்கு' செய்து வருவதை குறிப்பிடாமலிருக்க முடியாது.

அவற்றுள் நியாயமான இடக்குகளும் உள்ளன என்பதற்கு ஐந்து முறை ஏற்றப்பட்ட பெட்றோல் விலையேற்றத்துக்கான எதிர்ப்பை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்-எதிர்பார்த்த அளவுக்கு பற்றி எரியாவிட்டாலும்!

டெல்லி போன்ற பெரு நகரங்களில் ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்கப்படுகிற பெட்றோல், உள்நாட்டு கிராமங்களில், குறிப்பாக பெட்றோல் பங்க் இல்லாத கிராமங்களில் ரூபாய் 54/=வரை விற்கப்படுகிறது.

"எந்த அரசாக இருந்தாலும் பெட்றோல் விலை ஏற்றத்தை தடுக்க முடியாது" என்றும், 'கடந்த அரசுகளும் பெட்றோல் விலையை ஏற்றவே செய்தன" என்றும் கருணாநிதி போன்றவர்கள் தடுப்பாட்டம் ஆடினாலும் கூட காம்ரேடுகளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.

ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற பெட்றோலிய சுத்திகரிப்பு கம்பெனிகளுக்கு வரிச்சலுகையாக கோடிக்கணக்கான ரூபாய்களைத் தாரை வார்ப்பதை தடுத்திருக்கலாம்.

ரிலையன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே - பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியில் மட்டும்- 10,000/ கோடிக்கும் மேல் வரி பாக்கி வைத்துள்ளது (நன்றி: ஜூ.வி). இந்த வரி பாக்கிகளை எந்த அரசாங்கமும் வசூலிக்க முன் வருவதில்லை.தேசிய கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் சில கோடிகளை அன்பளிப்பாக வழங்கிவிடுவதனால், இந்நிறுவனங்களின் வரி ஏய்ப்பு கண்டுகொள்ளப்படுவதில்லை.



கடுமையாக விலை ஏறி விட்ட இந்நாளிலும், பெட்ரோல் ஒரு லிட்டருக்கு அரசுக்கு ரூ.17/=மட்டுமே அடக்க விலையாகிறது. பெட்ரோலின் விலையில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகை அரசு சாமானியர்கள் மீது விதிக்கும் வரிச்சுமையே!

பெட்றோலிய உற்பத்தியில் சற்றொப்ப இந்தியாவின் நிலையிலேயே உள்ள பாகிஸ்தான்,மலேசியா போன்ற நாடுகளில் இன்னமும் பெட்ரொல் விலை இன்னமும் ரூ.17/= என்ற அளவில் தான் விற்கப்படுகிறதாமே. (அறிந்தவர்கள் தெரிவிக்கவும்)

அரசாங்கத்தின், அதன் கட்சிக்காரர்களின் வழக்கமான பல்லவி: "வேறு வழியில்லை"

பொது மக்களின் மனப்பான்மைக்கும் தான். சகித்துக்கொள்ளும் போது மாத்திரம்.