Thursday, February 09, 2006

மனமார்ந்த நன்றிகள்




இன்றைய தினமலரில் 'எழுத்தோவியங்கள்' குறித்து எழுதப்பட்டுள்ளது. இத்தகைய வெகுஜன ஊடகங்களின் அங்கீகாரங்கள் ஒரு உந்து விசை. மகிழ்ச்சி.

இதன் பொருட்டு எனக்கு முதலில் வாழ்த்தி தகவல் சொன்ன சகோதரி கீதா,சகோதரர் மாயவரத்தான், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் வாழ்த்துக்களோடு வந்த சகோதரர்கள் அழகு அண்ணன், அபூ உமர், சர்தார்,கோகுல், ஹெச்.ஏ.அப்பாஸ்,..........இன்னும் தொடர்கிற..... அனைத்து நல் உள்ளங்களுக்கும், இவ்வங்கீகாரத்தை மேலும் வெளிச்சமிட்டு வைத்த 'தேன்கூட்'டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Friday, February 03, 2006

கால நதி

கால நதி

கொண்டாடியும்
குறை சொல்லியும்
பயணித்துக்கொண்டேயிருக்கின்றன
பல கோடி பாதங்கள்.
பாதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது
ஆழமானதொரு நதியைப் போல
அமைதியாக..!

புலன்களின் அனுபவச்சாயத்தை
பூசிக்கொள்ளும் பாதங்கள்
வேறு வழியின்றி
விமர்சிக்கத் தொடங்குகின்றன
பாதையினை.

பயணம் நின்றுப்போகும்
ஓர்பொழுதில்
பாதங்கள் ஆகிவிடுகின்றன
பாதையின் துளியாக...
குறைந்தபட்சம்
கண்ணுக்குத் தெரியாத
ஒரு ரேகையாக.!